Thayagam Tamil Radio Australia

திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தலை சம்பூரில் அனுஷ்டிக்கத் தீர்மானம்

September 25, 2025

Spread the love

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தல் திருகோணமலையில் நாளை மாவட்டம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – சம்பூர், ஆலங்குலம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் நேற்றைய கலந்துரையாடலின் போது, நினைவேந்தல் ஏற்பாடுகள் ஒழுங்காக முடிவுசெய்யப்பட்டன.

நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க. பண்பரசன் இதனை உறுதிப்படுத்தி, தொடர்புடைய தகவல்களை வெளியிட்டார்.