அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நடைபெற்ற திடீர் சோதனையின் போது, சிறை அதிகாரிகள் சயனைட் (Cyanide) குப்பி ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
சிறைச்சாலை நிர்வாகத்தின் தகவல்படி, இது போதைப்பொருள் கடத்தல்காரர் “குடு சலிந்து”வின் உதவியாளராக விளங்கும் தரிந்து மதுசங்க என்பவரிடம் இருந்து மீட்கப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், இந்த சயனைட் குப்பி, சிறையில் உள்ள கொமாண்டோ கவிஷ்க குமாரவை கொலை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதெனத் தெரியவந்துள்ளது.
மேலும், அதன் விஷப்பாடை பரிசோதிக்க சிறை உள்பகுதியில் ஒரு பல்லிக்கு ஊசி மூலம் சயனைட் செலுத்தப்பட்டது. உடனடியாக அந்தப் பல்லி உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post Views: 186