தைவானின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றுவது மற்றும் கடல்வழி முற்றுகையிடுவதை நோக்கமாகக் கொண்டு, சீனாவின் தரைப்படை, கடற்படை மற்றும் வான்படைகள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தாய்வானுக்கு அமெரிக்கா 11 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்யத் தீர்மானித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நேரடித் துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் முன்னெடுக்கப்படும் எனச் சீனா அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையைச் சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரான சவால் எனத் தைவான் ஜனாதிபதி அலுவலகம் வர்ணித்துள்ளது.
சீனாவின் நகர்வுகளைத் தனது ஏவுகணை அமைப்புகள் மூலம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தமது படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தைவான் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.