மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை பகுதியை சேர்ந்த டிலக்சன் எனும் நபரே உயிரிழந்துள்ளார்.
கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்த டிலக்சனின் தம்பி மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வேளை , அருகில் வியாபாரத்தில் ஈடுபட்டவருடன் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து தனது அண்ணனை சம்பவ இடத்திற்கு தொலைபேசி ஊடாக அழைத்த போது , சம்பவ இடத்திற்கு வந்தவர் தம்பியுடன் சேர்ந்து தர்க்கத்தில் ஈடுபட்டவர் மீது தாக்குதலை நடாத்தியுள்ளார்.
அதன் போது , நால்வர் கொண்ட குழு டிலக்சன் மீது கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரும் பொலிசாரிடம் சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.