கிரீசில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற போயிங் 757 வகை விமானம், நடுவானில் திடீரென தீப்பற்றியதைத் தொடர்ந்து, அது அவசரமாக இத்தாலியின் பிரிண்டிசி நகரத்தில் தரையிறக்கப்பட்டது.
கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், விமானத்தில் பயணித்த 273 பயணிகளும் 8 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விமானம் புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட தீயால், பெரும் அபாயம் நேரும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனை விமானி சீராகக் கையாளுவதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Post Views: 179