வங்கிக் கணக்குகள் ஆபத்தில்: 30,000 ஆஸ்திரேலியர்களின் தகவல்கள் இணையத்தில் கசியியுள்ளது
ஆஸ்திரேலியாவில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளின் தரவுகள் இணையத்தில் கசிந்திருப்பதாக தகவல் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தப் தகவல்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக பல முக்கிய வங்கிகளைச் சார்ந்தவை என ஆஸ்திரேலிய Tech பாதுகாப்பு நிறுவனம் Dvuln தெரிவித்துள்ளது.
இவை வங்கிகளின் தரவுத்தளங்களில் இருந்து நேரடியாக திருடப்படவில்லை. மாறாக, வாடிக்கையாளர் தொலைபேசிகள் மற்றும் கம்ப்யூட்டர்களில் உள்ள “infostealer malware” எனப்படும் தீய மென்பொருள்கள் மூலம் திருடப்பட்டுள்ளது.
ஒரே ஒரு வங்கியில் மட்டும் 10,000 வாடிக்கையாளர் விவரங்கள் “infostealer” தரவுப் பதிவுகளில் கண்டறியப்பட்டது. மற்றொரு வங்கியில் 5000 விவரங்கள், மேலும் மற்றொரு வங்கியில் 4000 விவரங்கள் வெளிநாட்டு குற்றவாளிகளால் பகிரப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கமன்வெல்த் வங்கி, NAB, ANZ, வெஸ்ட்பேக் உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் முக்கிய நான்கு வங்கிகளின் வாடிக்கையாளர்களின் தகவல்களும் இதில் அடங்கியுள்ளன.
Dvuln எச்சரிக்கையில், “multi-factor authentication” போன்ற பாதுகாப்பு முறைகளும் இந்த ஆபத்தில் முழுமையான பாதுகாப்பாக இருக்க முடியாது என தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆஸ்திரேலிய வங்கி சங்கத்தின் தலைவி அன்னா பிளை கூறியதாவது: “இந்த விவகாரம் வங்கிகளின் தரவுத்தளங்களில் இருந்து திருடப்படவில்லை ஆனால் வாடிக்கையாளர் சாதனங்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை பாதுகாப்பது எங்களின் முதல் முன்னுரிமை.” எனவே நாம் வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொள்வது வலுவான மற்றும் தனிப்பட்ட கடவுச்சொற்களை உருவாக்கவும், அவற்றை அவ்வப்போது மாற்றவும். நம்பகமான ஆன்டி-வைரஸ் மென்பொருளை நிறுவி பராமரிக்கவும். கணக்குகளில் சந்தேகமான நடவடிக்கைகளை கவனிக்கவும், உடனே வங்கியைத் தொடர்பு கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.