இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
போட்டியின் இரண்டாவது நாள் மதியபோசன இடைவேளையின் போது, பங்களாதேஷ் அணி 117 ஓவர்களில் 04 விக்கெட்கள் இழப்பிற்கு 383 ஓட்டங்களை எடுத்துள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு மிகச் சிறப்பான தொடக்கத்தினை வழங்கிய நஜிமுல் ஹொசைன் சான்டோ, 148 ஓட்டங்கள் எடுத்த பின்னர் ஆட்டமிழந்தார். இது அவரது ஆறாவது டெஸ்ட் சதமாகும். அவருடன் களம் காணும் முஸ்பிகீர் ரஹீம், 141 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் துடுப்பாடி வருகிறார். இது அவரது 12ஆவது டெஸ்ட் சதமாகும். இலங்கை அணிக்கெதிராகப் பெற்றுள்ள நான்காவது சதமாகும்.
அவர்களுக்கு ஆதரவாக லிட்டோன் டாஸ் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். ஆரம்பத்தில் விக்கெட்கள் வீழ்ந்த போதும், அந்த அதிர்ச்சி நிலையை தாண்டி, பங்களாதேஷ் அணி வலுவாக மீண்டு வந்துள்ளது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ மற்றும் தரிந்து ரத்நாயக்க தலா 2 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளனர்.