ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 60 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடியால் இறந்து போகிறார்கள்.
நெதர்லாந்தில் நோய்வாய்ப்பட்ட அல்லது ஆக்ரோஷமாக இருக்கும் உரிமை கேட்பாரற்ற நாய்கள் கருணை கொலை செய்யப்படுகின்றன. வேறு சில நாடுகளில் நாய் உரிமையாளர்கள் பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும்.
பொதுவாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் நாய் நம்மை கடித்து விட்டால், அது வீட்டு நாயோ, தெரு நாயோ அதில் எந்த வேறுபாடும் கிடையாது. தடுப்பூசி போடப்பட்ட நாயின் வாயிலும் ரேபிஸ் வைரஸ் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. அதனால் எந்த நாய் கடித்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். முதலில் நாய் கடித்த இடத்தை ஓடும் தண்ணீரில் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். உடனே மருத்துவமனை செல்ல வேண்டும். நாய் கடித்த பின் கண்டிப்பாக ஐந்து ஊசிகள் போட வேண்டும். முகத்துக்கு அருகில் கடித்துள்ளது என்றால், குறிப்பிட்ட தடுப்பூசியை காயத்தை சுற்றிலும் போடுவது அவசியம். பொதுவாக நாய்க்கு தடுப்பூசி போட்டிருந்தால் கடிபட்டவருக்கு தடுப்பூசி வேண்டாம் என்பது தவறு. கடிபட்டவரும் தடுப்பூசி போட்ட கொள்ள வேண்டும்.
ஒரு ஜோடி நாய் மூன்று ஆண்டுகளில் 400 ஆக பெருகுகிறது என்கிறது ஒரு சர்வே . எனவே நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒருவேளை நாய் கடித்து விட்டால் அதற்கான முதலுதவி, போடவேண்டிய தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்வு அவசியம்.