Thayagam Tamil Radio Australia

இலங்கையில் ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! தோடம் பழம் 600 ரூபா : திராட்சை 5000 ரூபா – 27

September 22, 2022

இறக்குமதி செய்யப்படும் தோடம் பழம் ஒன்றின் விலையானது 600 ரூபாவுக்கும் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு அங்காடியில் தோடம் பழத்தின் விலை 621 ரூபா

பிரபல சிறப்பு அங்காடி நிறுவனம் ஒன்றின் கிளைகளில் இறக்குமதி செய்யப்பட்ட தோடம் பழம் ஒன்று அதன் எடைக்கு ஏற்ப 621 ரூபா விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் தோடம் பழம் 3 ஆயிரத்து 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ திராட்சை பழம் 5 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.