அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டவுடன் இறக்குமதி பொருட்கள் மீதான தடை நீக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று நடைபெற்றது. இதன்போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“இதுவொரு தற்காலிக தடை. இது படிப்படியாக மாறும். இறக்குமதி தடையின் மூலம், இலங்கையின் தொழில்துறை துறையில் மூலப்பொருட்கள் மற்றும் துணைப் பொருட்கள் உட்பட பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.
வாரந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறை பரிசீலனை செய்வது என அரசு முடிவு செய்துள்ளது. முக்கியத்துவத்தின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு தேவையான சுதந்திரம் வழங்கப்படும்.
இறக்குமதிக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளமை, இறக்குமதிக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டமை மற்றும் அந்திய செலாவணி நெருக்கடி என்பன காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.