1988-89 காலப்பகுதியில் படலந்த சித்திரவதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்ட ஏராளமானோர் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நான் சட்டத்திற்காக பணியாற்றுகிறேன். எவரையும் அவதூறு செய்ய விரும்பவில்லை. அதன்படி, இந்த சித்திரவதை முகாம் சம்பவத்தில் தொடர்புடைய பலர் எதிர்காலத்தில் சட்டத்தின் கீழ் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
படலந்த சித்திரவதை முகாம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இந்த அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post Views: 113