புதிய அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தினசரி உணவு விலையை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்திய பிறகு, நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து உணவுகளை பெரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உணவகத்தில் ஒரு உறுப்பினருக்கான தினசரி உணவு கொடுப்பனவு ஆரம்பத்தில் 450 ரூபாயாக இருந்தது.
எனினும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த தொகை 2000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
புதிய விலைகள் காரணமாக, கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் காலை உணவை வீட்டிலிருந்து எடுத்துவருவதாகவும், பின்னர் மதிய உணவிற்கு வீட்டிற்குச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில எம்.பி.க்கள் தேநீருடன் சிற்றுண்டிகளை மட்டுமே சாப்பிடுவதாகவும், மேலும் சிலர், தேநீர் மாத்திரம் குடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post Views: 107