Thayagam Tamil Radio Australia

யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது

March 5, 2025

Spread the love

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (05) குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.