இரண்டு முறை சுவாசக் கோளாறு ஏற்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
88 வயதான போப் பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டரிலிருந்து ஆக்ஸிஜனைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
பல நாட்களாக சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்ட போப் பெப்ரவரி 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
போப்பின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் தனது கடுமையான நோயிலிருந்து முழுமையாக குணமடையவில்லை என்றும் வத்திக்கான் கூறுகிறது.
Post Views: 73