பிரித்தானியாவின் மூன்றாவது சார்ள்ஸ் மன்னரை யுக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் ஷெலன்ஸ்கி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்றைய தினம் லண்டனிலுள்ள பக்கிங்ஹம் மாளிகையில் இடம்பெற்றது.
ஐரோப்பிய தலைவர்களுடனான உச்சி மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் யுக்ரைன் ஜனாதிபதி மன்னரை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதியை மன்னர் சார்ள்ஸ் இன்முகத்துடன் வரவேற்றிருந்தார்.
இதேவேளை மன்னரை சந்திப்பதற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி ஷெலன்ஸ்கி சாதாரண உடையில் வந்தமை தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதும் ஷெலன்ஸ்கி சாதாரண உடையில் வந்திருந்தமை தொடர்பில் பத்திரிகையாளர் ஒருவர் வினவியிருந்தார். அதற்கு பதில் வழங்கிய ஷெலன்ஸ்கி,போர் முடிவுக்கு வந்ததன் பின்னரேயே கோட் சூட் போன்ற உடையை அணிவதென தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.
Post Views: 170