பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நடத்தை குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கவனத்திற்கொண்டு அதனை விசாரித்து அறிக்கை சமர்ப்பிதற்கென நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையே இவ்வாறு சபையில் முன்வைக்கப்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த குழுவில் செயற்குழுவின் பிரதி தலைவர் ஹேமாலி வீரசேகர குழுவிற்கு தலைமை வகித்தார். அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டவர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.
குறித்த அறிக்கையை ஒழுக்கநெறி மற்றும் வரப்பிரசாதங்கள் தொடர்பிலான சபையிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Post Views: 34