அசாம் மாநிலம் திமா ஹசாவோ மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
இதில் கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஒருவரின் உடல் 11 ஆம் திகதி மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சுரங்கத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் மீட்புப் பணிகள் தொடர்ந்தது. இதில் எஞ்சிய ஐவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
உடல்கள் நீரில் ஊரில் சிதைந்த நிலையில் காணப்படுவதால் அவற்றை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் இச் சுரங்க விபத்தில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கும் மாநில அரசு ரூபாய் 10 இலட்சம் இழப்பீடு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
Post Views: 30