Thayagam Tamil Radio Australia

30 ஆண்டுகளின் பின்னர் குருந்தூர் மலை ஆலயத்தில் சிவராத்திரி விழா! தீவிர கண்காணிப்பில் படையினர் -42

September 22, 2022

Spread the love

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில் மக்கள் கலந்துக்கெண்டு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

குருந்தூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் இன்று சிவராத்திரி வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

1990 ஆம் ஆண்டின் பின்னர் இந்த ஆண்டு ஸ்ரீ கோணமடு பிள்ளையார் ஆலயம் புனர்நிர்மானம் செய்யப்பட்டு இம்முறையே சிவராத்திரி வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றுள்ளன.

முள்ளியவளை, தண்ணீருற்று, குமுழமுனை கிராமங்களை சேர்ந்த மக்கள் பலர் வழிபாடுகளில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதுடன்,சிவராத்திரி விழாவினை முன்னிட்டு அங்கு பொலிஸாரும், படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.