Thayagam Tamil Radio Australia

யாழில் வீடு திரும்பாத 17 வயது மாணவி – இரண்டாம் வாரமும் அவல நிலையில் தாயார்!

July 28, 2025

Spread the love

யாழ்ப்பாணத்தில் 17 வயதுடைய மாணவி ஒருவர் கடந்த இரண்டு வாரங்களாக காணவில்லை என அவரது தாயார் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

செல்லர் வீதியைச் சேர்ந்த இந்த மாணவி, கடந்த ஜூலை 15ஆம் திகதி தனது சிறிய சகோதரனை பாடசாலையிலிருந்து அழைத்து வருவதற்காக நண்பகல் வேளையில் வழமையாய்ப் புறப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் பாடசாலைக்கு செல்லவோ, வீட்டிற்குத் திரும்பவோ இல்லை.

இந்த நிலைமை குறித்தும், உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்ததாக மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்நிலையில் இரு வாரங்கள் கடந்தும் மாணவியைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்றும், இது தொடர்பான விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியை யாரேனும் பார்த்திருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.