Thayagam Tamil Radio Australia

நியூஸிலாந்து செல்ல காத்திருப்போருக்கான அறிவித்தல்! தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நடைமுறை – 38

September 22, 2022

நியூஸிலாந்திற்கு செல்வதற்காக விசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு கொழும்பில் உள்ள நியூஸிலாந்து உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 

இதன்படி,  இலங்கையர்களுக்கான விசா நடைமுறை தொடர்பான கடவுச்சீட்டுத் தேவைகளில் மாற்றங்களை உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

விசா நடைமுறையின்போது பெரும்பாலான விண்ணப்பதாரர்கள், அசல் கடவுச்சீட்டை குடிவரவு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நிபந்தனை

தற்போது அந்த நிபந்தனையை, தற்காலிகமாக நியூசிஸிலாந்து குடிவரவு திணைக்களம் நீக்கியுள்ளதாக நியூசிஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் ஆப்பிள்டன் தெரிவித்தார்.

அதற்கு பதிலாக விண்ணப்பதாரர்கள் தங்கள் கடவுச்சீட்டின் ஸ்கேன் செய்யப்பட்ட உயர் தர (High Quality) பிரதியை சமர்ப்பிக்க வேண்டும். 

நியூசிஸிலாந்திற்குள் நுழைவதற்காக தற்காலிக விசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தும் என உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.immigration.govt.nz என்ற வலைத்தளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.