Thayagam Tamil Radio Australia

காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க இராமேஸ்வர கடற்தொழிலாளர்கள் தீர்மானம் – 33

September 22, 2022

Spread the love

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி  இராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடற்தொழிலாளர் சங்கங்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கடற்தொழிலாளர் சங்க தலைவர்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.