Thayagam Tamil Radio Australia

காலணிகளை கொள்வனவு செய்ய தவணை முறை வசதி – 25

September 22, 2022

இலங்கையில் காலணிகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், எளிமையாக தவணை முறையில் பணத்தை செலுத்தி காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க காலணி தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

ஒரு ஜோடி காலணியின் (சப்பாத்து) விலையானது 7 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் இருப்பதால், அதற்கான விலையை தவணை முறையில் செலுத்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

7 ஆயிரம் ரூபா பெறுமதியான காலணிக்கு மூன்று தவணைகளில் பணத்தை செலுத்த முடியும் என காலணி தயாரிப்பு நிறுவனங்கள் இணையத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளன.