Thayagam Tamil Radio Australia

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு – 13

September 21, 2022

Spread the love

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் தன்னிடம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமைச்சரவைக்கான அறிவிப்பு

அதன்படி சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு முன் உரிய உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தமக்கு அறிவித்ததாக சபாநாயகர் கூறியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மேலும் கூறுகையில், ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.