தமிழ் சினிமாவில் இப்போது உள்ள இளம் நடிகர்களில் டாப்பில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் முதலில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சிக்குள் வந்து பின் படிப்படியாக சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் என ரசிகர்கள் புகழ வளர்ந்தவர்.
இவரது சினிமா பயணத்தை ஒரு உதாரணமாக கூட அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். விடா முயற்சியும் திறமையும் இருந்தால் அவருக்கு கண்டிப்பாக வெற்றி உண்டு என்பது இவரது பயணத்தில் தெரியும்.
கடந்த வருடம் டாக்டர் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன் இந்த வருடம் டான் என்ற படத்தை வெளியிட்டார், அதுவும் செம ஹிட். தற்போது அவரது நடிப்பில் அடுத்ததாக பிரின்ஸ் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது, அதற்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங்.
Post Views: 8