தமிழ் சினிமாவில் நடிப்பு என்ற சொல்லுக்கு மறுசொல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று தான் கூறுவார்கள்.
அந்த அளவிற்கு நடிப்பு அரக்கனாக திரையில் வாழ்ந்துள்ளார் சிவாஜி.பராசக்தியில் துவங்கிய இவருடைய பயணம் பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தில் முடிவுக்கு வந்தது.
ஆனால், இன்று வரை தன்னுடைய நடிப்பின் மூலம் ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் முடிவே இல்லா நடிகனாக வாழ்ந்து வருகிறார் சிவாஜி.
மனைவி கமலா கணேசன்
நடிகர் சிவாஜி கணேசன் 1952ஆம் ஆண்டு கமலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். ராம்குமார், பிரபு, ஷாந்தி, தேன்மொழி சிவாஜியின் பிள்ளைகள் ஆவார்கள்.
இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.